பிரம்மானந்தம் என்னும் தொழிலதிபருக்கு ஆறு பிள்ளைகள். கடைசி மகனைத் தவிர எல்லோருக்கும் திருமணமாகி, திசைக்கு ஒருவராக இருக்கின்றனர். பேரன் பேத்திகள் என மொத்தம் 30 பேர் கொண்ட பெரிய குடும்பமாக வாழும் அவருக்கு ஒரு ஆசை. அது என்னவென்றால் தான் வாழும் காலத்திலேயே தன் குடும்பம் மொத்தப்பேரையும் வைத்து ஒரு குரூப் போட்டோ எடுத்து, அதைத் தன் வீட்டுச் சுவற்றில் மாற்ற வேண்டும் என்பது _ வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் பிள்ளைகளை ஒரே நாளில் - ஒன்றாக வைத்து ஒரு போட்டோ எடுக்க சாத்தியப்பட்டதா? அதை அவர் சாதித்தாரா? அவர் ஆசை நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு பதில் வேண்டுமானால் புத்தகத்தை வாங்கிப் புரட்டுங்கள்.